மேலும் செய்திகள்
மணல் கடத்தல் வாலிபர் கைது
30-Mar-2025
திருக்கோவிலுார் : அரகண்டநல்லூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய, 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேவனூர் கூட்ரோடு அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து சென்ற மாட்டு வண்டிகளை மறித்து சோதனையிட்டனர். அப்போது, அதில் மணல் கடத்தி செல்லப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, தேவனூரை சேர்ந்த நடேசன் மகன் அபிஷேக், 27; கண்ணன் மகன் சரவணன், 41; பாவாடை மகன் பழனிச்சாமி, 49; ஆகியோரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
30-Mar-2025