உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மணல் கடத்திய வாகனம் பறிமுதல்; ஒருவர் கைது

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்; ஒருவர் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே டாட்டா ஏஸ் வாகனத்தில் மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர். திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வீரட்டகரம் கூட்டுறவு வங்கி அருகே சென்ற போது, எதிரில் வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, 55; தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணலை சாக்கு மூட்டைகளில் கட்டி அரை யூனிட் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்து கோவிந்தசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை