மேலும் செய்திகள்
விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி
15-Jul-2025
சோமேஸ்வரர் கோவிலில் 22ம் ஆண்டு ருத்ராபிஷேக பூஜை
22-Jul-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கீழையூர் தேரடி விநாயகர்க்கு 40ம் ஆண்டு சந்தன காப்பு விழா நேற்று நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 40ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் மாலை துவங்கியது. முதல் நாள் விநாயகருக்கு மகா அபிஷேகமும், பழம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக மாலை 6:00 மணிக்கு, விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, நாதஸ்வர தவில் இன்னிசை கச்சேரி, தொடர்ந்து உற்சவர் விநாயகர் வீதி உலா நடந்தது.
15-Jul-2025
22-Jul-2025