| ADDED : நவ 26, 2025 07:46 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வை அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு கடிதம் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை நிர்ணயம் செய்த காலத்திற்குள் இலக்கை அடைந்து சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வை அலுவலர்களுக்கு பாராட்டு கடிதம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் காலக்கெடுவிற்குள் பணிகளை மேற்கொண்டு இலக்கை அடைந்த 4 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், 4 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்கள் என மொத்தம் 8 பேருக்கு பாராட்டு கடிதம் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 52 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் பராட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிரத் திருத்தம் பணிகளை வாக்காளர்கள் விடுபடாமல் தொடர்ந்து சிறப்பாக பணிகளை மேற்கொள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜீவா, தேர்தல் தாசில்தார் பரந்தாமன் உட்பட பலர் பங்கேற்றனர்.