சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வட்டார கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அத்தண்டமருதுார் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கால்நடை உதவி இயக்குனர் அருண் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர் சையத் அஷ்ரப் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற, 198க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளர் பாலாஜி செய்திருந்தார்.