உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாநில அளவிலான குத்துச்சண்டை; சங்கராபுரம் மாணவர்கள் சாதனை

 மாநில அளவிலான குத்துச்சண்டை; சங்கராபுரம் மாணவர்கள் சாதனை

சங்கராபுரம்: மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவ, மாணவிகள் பதக்கங்களை குவித்தனர். கருரில் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி நடந்தது. இப்போட்டியில் கரூர், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெவ்வேறு எடை பிரிவுகளாக நடந்த போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த மாணவ,மாணவிகள் 18 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களை வென்றனர். ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் 5வது இடம் பெற்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை சங்கராபுரம் சூரியா ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் சூரியமுர்த்தி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை