மாநில அளவிலான அறிவியல் நாடக திருவிழா போட்டி
கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் நாடக திருவிழா போட்டி கள்ளக்குறிச்சியில் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பில் 9 மற்றும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான நாடக திருவிழா போட்டி நேற்று தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. நிகழ்ச்சியில் சி.இ.ஓ., கார்த்திகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகோபால், விஷ்ணுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 19 மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நேற்று அறிவியல் நாடகத் திருவிழா போட்டிகள் நடந்தது. போட்டிகள் இன்றும் நடக்கிறது. அறிவியல் மனப்பான்மையை சமூகத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மாணவர்கள் நாடகங்களாக நடித்துக் காண்பித்தனர். இதில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெறும் அணிகள் கர்நாடாக மாநிலத்தில் நடைபெறும் தென்னியந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் தண்டபாணி, செந்தில்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், பள்ளி துணை ஆய்வாளர்கள் சரவணன், வேல்முருகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.