உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எடையூர் பள்ளியில் மாணவர் மன்றம்

எடையூர் பள்ளியில் மாணவர் மன்றம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். ஆசிரியர் உஷா வரவேற்றார். ஊராட்சி தலைவர் சகுந்தலா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நதியா, ஊராட்சி துணைத் தலைவர் தமிழேந்தி முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் கஜேந்திரன், சிறப்பு விருந்தினர் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சந்தியா மாணவர் மன்றத்தைத் துவக்கி வைத்தார்.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பந்தம், தலைமை ஆசிரியர்கள் ரமேஷ், ராஜசேகரன், ஜெயசீலன், முன்னாள் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சண்முகப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ