| ADDED : ஜன 21, 2024 05:01 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகையையொட்டி சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.தைகிருத்திகையையொட்டி, நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேக, அலங்காரம் நடந்தது.தொடர்ந்து சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டையில் வள்ளி சமேத தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியைவழிபட்டனர். சங்கராபுரம்
காட்டுவனஞ்சூர் முருகன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதே போன்று, சங்கராபுரம் சன்னதி தெருவில் புதிதாக கட்டப்பட்ட சிவன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி
சிதம்பரேஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவிலில் நேற்று அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. முருக பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை வாசித்தனர்.