உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: போதை நபரால் பரபரப்பு

மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: போதை நபரால் பரபரப்பு

திருக்கோவிலுார் : வெள்ளம்புத்துார் கிராமத்தில் போதையில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்துார், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன், 36; இவர், நேற்று காலை 6:00 மணிக்கு மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.பின், திடீரென வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். கிராம மக்கள் இறங்கும்படி கூறியும் இறங்க மறுத்தார். தகவல் அறிந்த மின் ஊழியர் அப்பகுதியில் மின் விநியோகத்தை துண்டித்தார்.பின், திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் விநாயகம் மற்றும் குழுவினர் விரைந்து சென்று நாகப்பனை பத்திரமாக கீழே இறக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை