உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் அரசு ஆண்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா

திருக்கோவிலுார் அரசு ஆண்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தனியாக விளையாட்டு மைதானம் வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.திருக்கோவிலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இதனை முழுமையாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளே பயன்படுத்துகின்றனர். எனினும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இந்த விளையாட்டு மைதானம் பொதுவானது என கூறப்படுகிறது. இதன் காரணமாக முக்கியமான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நேரங்களில் மாணவர்களும், மாணவிகளும் ஒரே விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தனியாக விளையாட்டு மைதானம் இல்லை என்பதால், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு வகுப்புகள் வீணடிக்கப்படுகிறது. தனியாக விளையாட்டு மைதானம் வேண்டும் என மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் நீண்ட நாட்களாக கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை