உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவரை தாக்கிய வாலிபர் கைது

முதியவரை தாக்கிய வாலிபர் கைது

ரிஷிவந்தியம்; முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரை சேர்ந்தவர் பூபாலன்,63; இவர், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, அங்கு அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்மொழி,23; என்பவர் மது அருந்தினார். இதனை பூபாலன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பூபாலனை தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து, அருள்மொழியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை