உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கச்சேரி சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில், நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரணை செய்தனர். அவர், பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த காசிராஜா மகன் சின்னதுரை,20; என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார், அவரிடமிருந்த 12 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை