உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இளைஞர் தின விழா

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இளைஞர் தின விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இளைஞர் தின விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பிரவீனா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் நேரு யுவகேந்திரா மாவட்ட பொறுப்பாளர் சக்திவேல் பேசுகையில், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய துாண்டுதலாக இருக்கும். அவர் மிகச்சிறந்த வழிகாட்டி. இளைஞர்கள் விவேகானந்தரை பின்பற்றி வாழவேண்டும் என பேசினார். முன்னதாக விவேகானந்தர் பற்றிய பேச்சு, கட்டுரை மற்றும் கதைப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.துணை முதல்வர் ஜான் விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ