உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2 பி.டி.ஓ.,க்களுக்கு மீண்டும் இடமாறுதல்

2 பி.டி.ஓ.,க்களுக்கு மீண்டும் இடமாறுதல்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், நேற்று முன்தினம், 10 பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளன.இதில், உத்திரமேரூர்வட்டார நிர்வாகத்தை கவனித்து வந்த, பி.டி.ஓ., பாலாஜி என்பவருக்கு, காஞ்சிபுரம் கிராம ஊராட்சி நிர்வாகம் பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டு இருந்தார்.அதேபோல, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை, மிகை பணியிடத்தில் பணிபுரிந்து வந்த பி.டி.ஓ., சூர்யா என்பவரை, உத்திரமேரூர்கிராம ஊராட்சிகள் நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.இருவருக்கும், இடமாறுதல் ஆணை ரத்து செய்து, புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பாலாஜி என்பவர், கிராம ஊராட்சி நிர்வாகம் உத்திரமேரூர் பி.டி.ஓ.,வாகவும். கிராம ஊராட்சி நிர்வாகம் காஞ்சிபுரம் பி.டி.ஓ.,வாக சூர்யா நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி