உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

செங்குன்றம் : பாடியநல்லுார் சோதனை சாவடியில், செங்குன்றம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 'எய்ச்சர்' ரக சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு கீழே, பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட, 32 கிலோ கஞ்சா சிக்கியது.இதையடுத்து, வேன் ஓட்டி வந்த பாடியநல்லுார், ஜோதி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 26, கார்த்திகேயன்,23, மற்றும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 24, ஆகியோரை கைது செய்தனர்.அவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை, சென்னையில் விற்பனை செய்வதற்கு கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சாமற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ