உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்களுடன் முதல்வர் முகாம் 384 மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர் முகாம் 384 மனுக்கள் குவிந்தன

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த புள்ளலுார் கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றியக்குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த முகாமில், 384 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மின் இணைப்பு பெயர் மாற்றம், மூன்று நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, ஐந்து மகளிர் குழுக்களுக்கு கடன் என, ஒன்பது நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ., எழிலரசன் வழங்கினார். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், புள்ளலுார், தண்டலம், புரிசை, கொட்டவாக்கம், பரந்துார், வளத்துார் ஆகிய ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை