மேலும் செய்திகள்
அழிசூர் குடிநீர் கிணற்றில் பாம்புகள் நடமாட்டம்
4 hour(s) ago
4 மாதங்களிலேயே சாலையோரம் சேதம்
4 hour(s) ago
காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
4 hour(s) ago
தொங்கும் மின் ஒயரால் விவசாயிகள் அச்சம்
4 hour(s) ago
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், வெள்ளைகேட் பகுதியில் உள்ள முல்லை நகரில் வசிப்பவர் சிங்காரவேல், 40. இவர், காஞ்சிபுரம் வெள்ளைகேட் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்தில், பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், வெள்ளைகேட் கடையிலிருந்து, 200 பாக்ஸ் ஸ்வீட் மற்றும் இன்வெட்டர் பேட்டரியை எடுத்துக்கொண்டு, 'மாருதி சுசூகி டிசைர்' காரில், மாமண்டூருக்கு சென்றார்.செவிலிமேடு புறவழிச்சாலையில், மாலை 4:20 மணியளவில் சென்றுக் கொண்டிருந்தபோது, இன்வெட்டர் பேட்டரியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், திடீரென கார் தீப்பற்றி எரிய துவங்கியது. கார் லாக் ஆனதால், எளிதாக சிங்காரவேல் இறங்க முடியாமல், கண்ணாடியை உடைத்து வெளியேறினார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கார் எரிந்து நாசமான நிலையில், சிங்காரவேல் காயமின்றி தப்பினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago