உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாட்டு வெடி வெடித்து மாடு காயம்

நாட்டு வெடி வெடித்து மாடு காயம்

திருமால்பூர், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான கறவை மாட்டை நேற்று மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.அப்போது, மாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில், வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு ஏழுமலை சென்று பார்த்தார். அப்போது, மாட்டின் வாய் சிதறிய நிலையை கண்டார்.இதுகுறித்து, நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருமால்பூர் கால்நடை மருத்துவமனையில், காயமடைந்த மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.காட்டுப் பன்றிகளை பிடிக்க வெடி வைக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை