மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
13 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
13 hour(s) ago
கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி
13 hour(s) ago
சோழவரம், மீஞ்சூர் - வண்டலுார் இடையேயான வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கடந்த, 4ம் தேதி, வெளிவட்ட சாலையில் உள்ள கும்மனுார் பகுதியில், தி.மு.க., கொடிகளுடன் ஐந்து கார்கள், வேகமாக பயணிப்பது, புழுதி பறக்க வேகமாக வட்டமடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டன.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார், கார்களின் பதிவு எண்களை கொண்டு விசாரணை நடத்தினர்.விசாரணையில், சோழவரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., துணை செயலர் சுந்தரமூர்த்தி - 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி ஆகியோரின் மகன் நவீன் மற்றும் அவரது நண்பர்கள் அபாயகரமாக கார்களை ஓட்டியது தெரிந்தது.இது தொடர்பாக வழக்குப்பதிந்து, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நவீன் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago