மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
11 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
11 hour(s) ago
கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி
11 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னைக்கு இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மேம்பாலத்தில் உள்ள தெரு மின்விளக்குகள் இரவு மட்டுமின்றி, பகலிலும் தொடர்ந்து ஒளிர்கிறது. இதனால், மின்சாரம் விரயமாவதுடன், ஊராட்சி நிதியும் வீணாகிறது. தொடர்ந்து, 24 மணி நேரமும் ஒளிர்வதால், மின் விளக்குகள் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது.எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தில் உள்ள தெரு மின்விளக்குகளை, கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் கூறியதாவது:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்குகள் தானியங்கி முறையில் இயக்கும் ‛டைமர்' மின்னணு சாதனம் பழுதடைந்துள்ளது. அதை பழுது நீக்கி, தெரு மின்விளக்குகள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago