| ADDED : ஜூலை 02, 2024 02:40 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இதில், வேலுார், ஆற்காடு செல்லும் பேருந்து நிற்கும் இடத்தின் அருகில்உள்ள சாலையில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு,பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.இதனால், பேருந்தை பிடிக்க ஓடும் பயணியர் கவனகுறைவாக கால் இடறி பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். அதேபோல, இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, விபத்துஏற்படுத்தும் வகையில், பல்லாங்குழி சாலையாக மாறியுள்ள பேருந்து நிலைய சாலையைசீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.