உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எச்சரிக்கை பலகையை மறைத்து ஒரகடத்தில் விளம்பர பதாகைகள்

எச்சரிக்கை பலகையை மறைத்து ஒரகடத்தில் விளம்பர பதாகைகள்

ஸ்ரீபெரும்புதுா:நெடுஞ்சாலை வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை மறைத்து கட்டப்பட்டுள்ள தனியார் விளம்பர பதாகைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சாலை வளைவுகளை ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுகின்றன. இதனால், வேகமாகன வரும் வாகனங்கள், வளைவுகளில் வேகத்தை குறைந்து பாதுகாப்பாக சென்று வருகின்றனர்.அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் உள்ள வளைவுகளில் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், தனியார் வீட்டுமனை விற்பனை விளம்பர பதாகைகள் எச்சரிக்கை பலகைகைளை மறைத்து கட்டப்பட்டுள்ளன. இதனால், நெடுஞ்சாலைகளில் வேகமாக வரும் வாகனங்கள் வளைவுகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கின்றனர்.அதேபோல, விளம்பர பதாகைகளால் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.எனவே, நெடுஞ்சாலைகளில் எச்சரிக்கை பலகைகளை மறைத்து கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி