உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பை கொட்டும் இடமாக மாறிய திறந்தவெளி கிணறு

குப்பை கொட்டும் இடமாக மாறிய திறந்தவெளி கிணறு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, ஒழுக்கோல்பட்டு ஊராட்சி கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் அருகே, திறந்தவெளி கிணறு உள்ளது.இந்த திறந்தவெளி கிணற்று நீரை, அந்த கிராமத்தினர் குடிநீராக பயன் படுத்தி வந்தனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு, நீராதாரம் வற்றி விட்டதால், திறந்தவெளிகிணறு பயன்பாடு இன்றி உள்ளது. மேலும், இந்த கிணற்றில் குப்பை கொட்டி துார்த்துள்ளனர்.இருப்பினும், திறந்தவெளி கிணற்றில், 7 அடி ஆழத்திற்கு பள்ளம் இருப்பதால், அந்த வழியாக செல்வோர் தவறி விழும் அபாயம் உள்ளது.எனவே, ஆபத்தான முறையில் திறந்தவெளி கிணறு மீது தடுப்புஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை