உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாராட்டு சான்றிதழ் விவகாரம் உயர் அதிகாரிகள் அரசியல்

பாராட்டு சான்றிதழ் விவகாரம் உயர் அதிகாரிகள் அரசியல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக மைதானத்தில், சுதந்திர தின விழா நடந்தது. இதில், கலெக்டர் கலைச்செல்வி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்தோர் என, 520 பேருக்கு, கலெக்டர் கலைச்செல்வி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அரசு ஊழியர்களுக்கு, இந்த பாராட்டு சான்றிதழ், அந்தந்த உயரதிகாரிகளால் பரிந்துரை செய்யப்படுகிறது. அவ்வாறு பரிந்துரை செய்யப்படுவதில், பாரபட்சம் காட்டுவதாக அரசு ஊழியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.சிறப்பாக பணியாற்றினாலும், அதிகாரிகள் ஆதரவு இல்லாததால், பாராட்டு சான்றிதழ் மறுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். கலெக்டரின் பாராட்டு சான்றிதழ் தங்களுக்கு ஊக்கமளிக்கும் எனவும், அதிகாரிகள் அரசியல் செய்வதால், ஊழியர்கள் பலருக்கும் வருத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும், சுதந்திர தின விழாவிலும் வழங்கப்படும் சான்றிதழை பலரும் இரண்டு, மூன்று முறைக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ