உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலங்களின் கீழ் நீர்வழித்தடம் சீரமைப்பு

பாலங்களின் கீழ் நீர்வழித்தடம் சீரமைப்பு

காஞ்சிபுரம், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வருவாய், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி, நெடுஞ்சாலை, நீர்வள ஆதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில், மாநில நெடுஞ்சாலைகளான, காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, விஷார் -- பெரும்பாக்கம் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட சிறுபாலங்களின் கீழ், செடி, கொடிகள் புதர்போல மண்டி கிடந்த அடைப்புகள் நீக்கப்பட்டு, நீர்வழித்தட பாதை சீரமைக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து, காஞ்சிபுரம்கோட்டம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வடகிழக்கு பருவமழையால், வேகவதி ஆற்றில் இருந்து முசரவாக்கம், மேட்டுப்பாளையம் ஏரியில் இருந்து கலங்கல் நீர் வெளியேறும் கால்வாய் உள்ளது.மழைநீர் செல்லும், இக்கால்வாய் சாலையின் குறுக்கே செல்லும் இடங்களான திருப்பருத்திகுன்றம், குண்டுகுளம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன.இப்பாலத்தின் கீழ் புதர்போல மண்டி கிடந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு, மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், நீர்வழித்தட பாதை அனைத்தும் சீரமைக்கப்பட்டு உள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி