உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் வரும் 15ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

காஞ்சிபுரத்தில் வரும் 15ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில், தொடர்புடைய 13 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம், என, 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் வரும் 15ம் தேதி, காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் திருவீதிப்பள்ளம் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. திருவீதிப்பள்ளம் பகுதியில், வாகனங்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் கேட்போர், முன் கட்டண தொகையாக, 1,000 ரூபாய், வரும் 9, 10 ஆகிய தேதிகளில் செலுத்தி, டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் பங்கேற்று, வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை, ஏலத்தின் முடிவில் திருப்பித்தரப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ