உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓரிக்கை மணி மண்டபத்தில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி

ஓரிக்கை மணி மண்டபத்தில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார். இதில், நேற்று, காஞ்சி காமகோடி பீடம் வைதிக தர்ம தர்ம ஷம்ரக் ஷனம் சபா டிரஸ்ட் சார்பில் 16வது ஆண்டு பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், கோமாதாவுடன் ஊர்வலமாக வந்து மணிமண்டபத்தில் உள்ள மஹா சுவாமிகள் சன்னிதியில் தரிசனம் செய்து, மஹா சுவாமிகள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவுருவப் படத்தை ஊர்வலமாகக் கொண்டு வந்தனர்.தொடர்ந்து பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. இதில் தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த, 300க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் காய்கறிகள், கனி வகைகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து, சிறப்பு பாத பூஜையும் செய்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை