உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெடுஞ்சாலையில் மீடியன் உடைப்பு பெட்ரோல் பங்க் நிர்வாகம் அடாவடி

நெடுஞ்சாலையில் மீடியன் உடைப்பு பெட்ரோல் பங்க் நிர்வாகம் அடாவடி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், பெட்ரோல் பங்கிற்கு வழி ஏற்படுத்த, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மீடியனை அனுமதியின்றி உடைத்து, அத்துமீறலில் ஈடுபட்டது பெட்ரோல் பங்க் நிர்வாகம்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆறுவழிச் சாலை விரிவாக்கத்தில், சாலையின் நடுவே 'மீடியன்' அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே, நெடுஞ்சாலையில் உள்ள தனியார் 'பெட்ரோல் பங்க்' நிர்வாகம், கடந்த வாரம் தங்களில் பெட்ரோல் பங்கிற்கு செல்ல வழியை ஏற்படுத்த, நெடுஞ்சாலையில் உள்ள 'மீடியனை' உடைத்தனர்.இரவோடு இரவாக, ஜே.சி.பி., வாயிலாக 30 அடிக்கும் மேல் சாலை மீடியனை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.இது குறித்து நெடுஞ்சாலை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''நெடுஞ்சாலையில் மீடியனை உடைத்து சேதப்படுத்திய சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும், உடைந்த மீடியன் மீண்டும் அமைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை