உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சகதியாக மாறிய வளாகம்; பள்ளி மாணவர்கள் அவதி

சகதியாக மாறிய வளாகம்; பள்ளி மாணவர்கள் அவதி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை காந்தி மைதானத்தில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.இதில், பள்ளியில் இறை வணக்கம் கூட்டம் நடைபெறும் வளாகத்தில் மண் சாலையாக இருப்பதால், சமீபத்தில் பெய்த மழைக்கு சகதியாக மாறியுள்ளது.இதன் காரணமாக, பள்ளி மாணவர்களும், நீதிமன்றத்திற்கு செல்வோரும், சகதியான சாலையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் பள்ளியில் இறை வணக்கம் நடைபெறும் வளாகம் அருகில் சகதியான சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை