உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல்லுாரி பட்டமளிப்பு விழா

கல்லுாரி பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் 72வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் முனைவர் முருககூத்தன் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலை துணைவேந்தர் தேர்வு குழு உறுப்பினரும், சென்னை பல்கலை பொறுப்பு குழு உறுப்பினருமான முனைவர் பேராசிரியர் முருகன், 806 மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.சென்னை பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பதக்கம் மற்றும் பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ