உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் வசதி தாண்டவராயன் நகரினர் வலியுறுத்தல்

கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் வசதி தாண்டவராயன் நகரினர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, 50வது வார்டு சின்னய்யங்குளம், தாண்டவராயன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் பெய்யும்மழைநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. மண் கால்வாயாக இருப்பதால், புல் முளைத்து கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால் சாதாரண மழைக்கே வீட்டு வாசலில் மழைநீர் தேங்குவதால், வீட்டு மதில்சுவர் ஈரப்பதம் காரணமாக வலுவிழக்கும் நிலை உள்ளது. மேலும், தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன.அவ்வப்போது பாம்புகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே, தாண்டவராயன் நகருக்கு மூடி வசதியுடன் கான்கிரீட் கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை