உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எச்சரிக்கை குறியீடு இல்லாத வளைவு சாலை

எச்சரிக்கை குறியீடு இல்லாத வளைவு சாலை

முத்துவேடு:காஞ்சிபுரம் ஒன்றியம், முத்துவேடு கிராமத்தில் இருந்து முசரவாக்கம் செல்லும் சாலையில், தனியார் கம்பெனி அருகில் அபாயகரமான சாலை வளைவு பகுதி உள்ளது.வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலையில், வளைவு குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில், குறியீடுடன் எச்சரிக்கை பலகை அமைக்கப்படவில்லை.மேலும், இப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லாததால், இரவு நேரத்தில், சாலை வளைவு இருப்பதை அறியாமல்வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவு பகுதியில், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, முத்துவேடு கிராமத்தில், வளைவு பகுதியில், வளைவு குறித்த எச்சரிக்கை குறியீடு பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ