உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புத்தேரியில் சிறுபாலம் சேதம் தட்டுத் தடுமாறும் வாகனங்கள் 

புத்தேரியில் சிறுபாலம் சேதம் தட்டுத் தடுமாறும் வாகனங்கள் 

புத்தேரி:காஞ்சிபுரம் ஒன்றியம்,புத்தேரி ஊராட்சி, கங்கையம்மன் கோவில் தெருவில், மழைநீர் கால்வாய் குறுக்கிடும் இடத்தில், பெரிய அளவிலான சிமென்ட் குழாய் பதித்து சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்றதால், சிமென்ட் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.மேலும், இப்பகுதியில் கட்டுமானப் பணிக்கு தேவையான மணல், செங்கல், ஜல்லி ஏற்றி வரும் வாகனங்கள் இத்தெருவிற்கு வர முடியாத சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த சிமென்ட் பைப்பை அகற்றிவிட்டு, அப்பகுதியில் கான்கிரீட்டில் சிறுபாலம்அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி