உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நடன கலைஞர்கள் சாதனை நிகழ்ச்சியில் திடீர் ரகளை

நடன கலைஞர்கள் சாதனை நிகழ்ச்சியில் திடீர் ரகளை

சென்னை:சென்னையில் நடந்த நடன கலைஞர்கள் சாதனை நிகழ்ச்சியில் திடீரென ரகளை ஏற்பட்டது.சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை, திரைப்பட நடன கலைஞர்கள் 5,000க்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து, 100 நிமிடங்கள் நடனமாடி சாதனை படைத்தனர்.நடன இயக்குனர் ராபர்ட், '100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்கள்' என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் பிரபு தேவா சிறப்பு விருந்தினராக வரவிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் நடனக் கலைஞர்கள், நடன மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி அடைந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரகளை ஏற்பட்டது. அதன்பின் பிரபுதேவா வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு, வர முடியாததற்கான காரணத்தை விளக்கினார். பங்கேற்பாளர்களிடம் மன்னிப்பு கோரியதோடு, நடனமாடியவர்களை பாராட்டினார். பிரபுதேவா கூறுகையில், 'பெரும் சிரத்தையோடு இதை செய்துள்ளீர்கள். என்னால் வரமுடியாமல் போய்விட்டது. இதற்காக கலைஞர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நிச்சயம் ஒரு முறை அனைவரையும் சந்திப்பேன்' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை