மேலும் செய்திகள்
புத்தேரியில் குடிநீர் நிரப்பாததால் வீணாகும் கால்நடை தொட்டி
19 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:-வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், செரப்பனஞ்சேரி அடுத்த, வெள்ளேரித்தாங்கல் பகுதியில், நெடுஞ்சாலையில் பழைய இரும்பு கடை இயங்கி வருகிறது.இங்கு கொண்டு வரப்படும் பேப்பர், அட்டை, பிளாஸ்டிக், இரும்பு கழிவுகள் மற்றும் குப்பை, நெடுஞ்சாலையோரம் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குப்பையில் இரை தேடி வரும் கால்நடைகள், திடீரென நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் ஓடுகின்றன.இதனால், நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள், சாலை குறுக்கே ஓடும் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் வருவோர், மாட்டின் மீது மோதி விபத்தில் சிக்கி, விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
19 hour(s) ago