உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொங்கும் மின்ஒயரால் விபத்து அபாயம்

தொங்கும் மின்ஒயரால் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புத்தளியில் இருந்து, புலிவாய் வழியாக மணல்மேடு கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையையொட்டி, விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் பதிக்கப்பட்டுள்ளது.இந்த மின்கம்பங்கள் வாயிலாக ஒயர்கள் பொருத்தப்பட்டு அப்பகுதி விவசாய நில மின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், புத்தளி- புலிவாய் இடையிலான மின் கம்பங்களில் உள்ள ஒயர்கள் தாழ்வாக தொங்குகிறது.இந்த வழியாகத்தான் அப்பகுதி விவசாயிகள் தங்களுடைய நடவுப்பணிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர் போன்ற வாகனங்களை தினமும் இயக்குகின்றனர்.மேலும், இப்பகுதியை சுற்றி உள்ள மக்கள் தினசரி விவசாய பணிகளுக்கு சென்று வர இந்த வழியை பயன்படுத்துகின்றனர். எனவே, விபத்து நடக்கும் முன் இப்பகுதியில் தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களை உயர்த்தி கட்ட சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி