மேலும் செய்திகள்
விவசாயிகள் தின விழா
6 hour(s) ago
படப்பை, : படப்பையில் இரண்டு ஆண்டுகளாக மந்த கதியில் நடக்கும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் ஜனவரி 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் மந்த கதியில் நடக்கின்றன. மேம்பாலம் பணிக்காக தடுப்பு அமைக்கப்பட்டதால், சாலை குறுகளாகிபடப்பை பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து உள்ளது.நெரிசலால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
6 hour(s) ago