| ADDED : ஜூலை 12, 2024 09:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவளார் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று, காலை, 11:00 மணி அளவில், கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறை தீர் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறை தீர் கூட்டத்தில், ஒன்பது மனுக்கள் வந்தன. இதில், இடமாறுதல், நிலுவை ஓய்வூதியம் ஆகியவை தீர்க்க வேண்டும் என, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இம்மனுக்கள் மீது, அடுத்த கூட்டத்திற்குள் நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் என, கூட்டுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.