உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் கோவில் நிலம் ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை

வாலாஜாபாத் கோவில் நிலம் ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை

வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சி, 15வது வார்டு, கீழாண்டை ராஜவீதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில், மனு ஒன்றை அளித்துள்ளார்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:வாலாஜாபாத் 12வது வார்டுக்கு உட்பட்ட திருவேங்கட பாகவதர் தெருவில், வெள்ளை பிள்ளையார் கோவில் உள்ளது.இக்கோவிலுக்குச் சொந்தமான ஒரு பகுதி நிலத்தை, அப்பகுதியில் வசித்த, மறைந்த நடராஜர் என்பவர், கடந்த காலத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.தற்போது, நடராஜரின் மகன் திருநாவுக்கரசு என்பவர், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, ஒப்பந்ததாரர் சேகர் என்பவரைக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து, கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.கோவில் நிலம் ஆக்கிரமிப்பை மீட்டு, கட்டட பணியை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ