உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில், வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இங்கு, 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் சி.ஐ.டி.யு., எனும் இந்திய தொழிற்சங்க மையத்தை அங்கீகரிக்க வேண்டும், சி.ஐ.டி.யு., உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில் இணையுமாறு தொழிலாளர்களை அச்சுறுத்துவது, கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.சாம்சங் நிறுவனத்தில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல், தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும், சம்பள உயர்வு, 8 மணி நேர பணி உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாம்சங் தொழிலாளர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் சுங்குவார்சத்திரம் -- வாலாஜாபாத் சாலையில் எச்சூர் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., மாநிலச் செயலர் முத்துகுமார், மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை