உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டெங்கு தடுப்பு நடவடிக்கை உத்திரமேரூரில் கொசு மருந்து தெளிப்பு

டெங்கு தடுப்பு நடவடிக்கை உத்திரமேரூரில் கொசு மருந்து தெளிப்பு

உத்தரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கை பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், குழுவாக கிராமங்களில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு,வருகின்றனர்.இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பவுல் ஏசுதாஸ் கூறியதாவது:தென்மேற்கு பருவ மழை பரவலாக பொழிந்து வருவதையடுத்து, டெங்கு தடுப்பு முன் நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள சுகாதாரத் துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் சுகாதார ஊழியர்களை கொண்டு அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.கொசுத் தொல்லை அதிகம் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொசு அழிப்பு மருந்து தெளித்தல் பணிகளையும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.குடியிருப்புகள் மத்தியில் கழிவுநீர் தேங்காமல் பராமரிக்கவும், பானைகள் மற்றும் பிளாஸ்டிக் ஓடுகள் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் ஆய்வு பகுதிகளில் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்,இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை