மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
4 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
4 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
4 hour(s) ago
காஞ்சிபுரம், : மதுரமங்கலம் அடுத்த, ஓ.எம்.மங்கலம் கிராமம் வழியாக, பேரம்பாக்கம் --- -தக்கோலம் சாலை செல்கிறது.இந்த சாலை வழியாக, ஓ.எம்.மங்கலம், கப்பான்கோட்டூர், சிவபுரம், பட்டுமுடையார்குப்பம் உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஓ.எம்.மங்கலம் வழியாக செல்லம் கூவம் ஆற்றைக் கடந்து, சகாயத்தோட்டம் மற்றும் தக்கோலம், பேரம்பாக்கம் ஆகிய பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.இந்த சாலை குறுக்கே, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பல்வேறு கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, செங்கல்பட்டு நபார்டு திட்டத்தில், 5.91 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.இந்த சாலை போடும் பணிக்கு, மாற்றுப்பாதை அமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இந்த பணியை, ஒராண்டில் முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago