| ADDED : ஆக 06, 2024 10:39 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் மாரி எல்லையம்மன் கோவிலில், ஆடிமாத 16ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றம் சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு 7:00 மணிக்கு மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு ஆகாய மாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், 10க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமத்தினைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.