உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2026ல் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வி: பா.ஜ., சாடல்

2026ல் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வி: பா.ஜ., சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை மக்கள் பதிலாக வழங்குவர் என தமிழக பா.ஜ., தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. கொலை, கொள்ளை, சர்வ சாதாரணமாக நடக்கிறது. கள்ளச்சாராயம் சாவுகள் தொடர்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் திமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களை கொலை செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது.திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரோடு எரித்த நிலையில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் பா.ஜ., நிர்வாகி சக்திவேல் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் பாமக நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்டார். மதுரையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் திராவிடர் மாடல் ஆட்சியா அல்லது கொலை மாடல் ஆட்சியா மக்கள் கேள்வி கேட்கின்றனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை மக்கள் பதிலாக வழங்குவர் என்பது நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Palanisamy T
ஜூலை 18, 2024 13:48

கையில் அதிகாரங்கள் குவிந்திருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதில்லை. திராவிடக் கட்சிகளை பிடிக்காதவர்கள் ஏன் அங்கே வாக்களிக்கின்றார்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ்நாடு தினம். இந்தநாளோடு அண்ணா அவர்களும் இருமொழிக் கொள்கையையும் அறிவித்தார். மத்திய அரசு முதலில் இந்தக் கொள்கையை ஏற்கட்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் திமுக வை படுதோல்வி அடையச் செய்யலாம்.


vijai
ஜூலை 18, 2024 12:20

பிரதீப் சார் என்னமோ சந்தேகமா இருக்கு இவ்வளவு நடந்த பிறகு விக்கிரவாண்டி ஜெயிக்க வச்சிருக்காங்க இந்த ரெண்டு வருஷத்துல எல்லாம் மறந்துட்டு பழைய மாதிரி ஓட்டு போடுவாங்க இது நம் தலைவிதி லட்டு பிரியாணி கூட்டம் இருக்கிற வரைக்கும் நான் ஆனாலும் தமிழன் நாட்டை காப்பாத்த முடியாது


T.sthivinayagam
ஜூலை 18, 2024 12:09

பாஜகாவுக்கு ஆசை அதிகம்தான் அதிமேதாவிகளின் ராஜதந்திரம் எடுபடவில்லை


மோகனசுந்தரம்
ஜூலை 18, 2024 11:15

நீர் என்னதான் காட்டு கத்தலாக கத்தினாலும் நூறு இருநூறுக்கு அலையும்இந்த மகா மட்டமான மக்களை திருத்த முடியாது. எனவே கடவுளின் மீது பாரத்தை போட்டு விட்டு அமைதியாக இருப்பதே நல்லது.


மேலும் செய்திகள்