வலிப்பு நோயால் ஓட்டுனர் பலி
ஸ்ரீபெரும்புதுார் : சுங்குவார்சத்திரம் அடுத்த காந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 39. நேற்று காலை மதுரமங்கலத்தில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக, தேவேந்திரன் காந்துாரில் இருந்து ஆட்டோவில் சென்றார்.மதுரமங்கலம் எம்.ஜி.ஆர்., சிலை அருகே வந்த போது, தேவேந்திரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சந்தவேலுாரில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தனர்-. அங்கு, நேற்று உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக் கின்றனர்.