மேலும் செய்திகள்
வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்
7 hour(s) ago
திருவொற்றியூர்:புதுவண்ணாரப்பேட்டை, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் நித்தியானந்தம், 54. இவர், திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள பலசரக்கு கடையில், ஊழியராக பணிபுரிந்தார்.அதே கடையில் பணிபுரியும் தன் நண்பர்களுடன், நேற்று முன்தினம் மாலை, திருச்சிணாங்குப்பம் கடலில் குளித்தார்.அப்போது, ராட்சத அலையில் சிக்கி நித்தியானந்தம் மாயமானார்.அதிர்ச்சியடைந்த நண்பர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை நித்தியானந்தம் உடல், அதே பகுதியில் கரை ஒதுங்கியது.தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், அந்த உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago