உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செம்பரம்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு

செம்பரம்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு

தண்டலம், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில், 6,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இந்த ஏரியின் மேற்புற பகுதி, ஸ்ரீபெரும்புதுார் அருகே காட்டரம்பாக்கம், கீவளூர், தண்டலம், மேவளூர் குப்பம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.இந்நிலையில், இருங்காட்டுகோட்டையை சுற்றியுள்ள தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குடியிருப்பு கழிவுகளை, தண்டலம் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் கொட்டி செல்கின்றனர்.மேலும், சென்னை - --பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், செம்பரம்பாக்கம் ஏரியின் உள்ளே குப்பை கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் குப்பைக்கு தீ வைத்து செல்கின்றனர்.இதிலிருந்து வெளியேறும் புகைமூட்டத்தால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குப்பை கழிவுகளால், ஏரி நீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எனவே, சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புற பகுதியில் குப்பை மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி