உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்தலசயனர் கோவிலில் தேர்தல் ஆணையர் தரிசனம்

ஸ்தலசயனர் கோவிலில் தேர்தல் ஆணையர் தரிசனம்

மாமல்லபுரம்:தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை தரிசித்தார்.மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு, நேற்று மாலை 6:30 மணிக்கு, உறவினர்களுடன், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ வந்தார்தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியரை தரிசித்து வழிபட்டார். சுவாமியர் குறித்து, அவருக்கு விளக்கப்பட்டது.முன்னதாக, கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு ஆகிய சிற்பங்களை கண்டு ரசித்தார். கடற்கரை கோவில் புல்வெளியில் அமர்ந்து, பஜனை பாடல்கள் பாடி மகிழ்ந்தார். செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயண சர்மா அவர்களை வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ