| ADDED : ஜூன் 30, 2024 11:39 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, அசோக் நகர், காமராஜர் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண்துகள் மற்றும் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், மழைநீர் வடிகால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழை காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய கழிவுநீர் அப்பகுதியை சூழும் நிலை உள்ளது. எனவே, அசோக் நகர், காமராஜர் தெருவில், மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.